ஜெயிலர் வசூல் எவ்வளவு?.. அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

Aug 26, 2023,01:18 PM IST
சென்னை : ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் படம் கடந்த 2 வாரங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமாவன சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீசானது. மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. சுமார் ரூ.120 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது பற்றி சோஷியல் மீடியாவில் பலவிதமான கருத்துக்கள் பரவி வருகிறது.



சிலர் ஜெயிலர் படம் பல கோடிகளை வசூலித்து வசூல் சாதனை படைத்து விட்டதாக கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் அதெல்லாம் கிடையாது என மறுத்து வருகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்கள், உண்மையில் ஜெயிலர் படம் எவ்வளவு தான் வசூல் செய்துள்ளது என தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வசூல் விபரத்தை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் வசூல் ரூ.500 கோடி தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது ஜெயிலர் படம் கடந்த 2 வாரங்களில் ரூ.525 கோடிகளை வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. தற்போதும் ஜெயிலர் படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே உள்ளது என்றும், தொடர்ந்து வசூல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான தொகையை வசூல் செய்து, ஜெயிலர் படம் சாதவை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.


ஜெயிலரின் வரலாற்று வசூல் சாதனை 525 கோடி பிளஸ்...superstar rajinikanth the record maker என்ற வாசகத்துடன், ரஜினி கை��ில் பெரிய துப்பாக்கியுடன் ஸ்டையிலான அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்