சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி வருகிறது. அவர் லேட்டஸ்டாக நடித்த ஜெயிலர் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் ஜெயிலர் படத்த நவம்பர் 12ம் தேதி தீபாவளியன்று ஒளிபரப்பவுள்ளது சன் டிவி.
இதன் மூலம் ரஜினிகாந்த் பிறந்த நாளை தீபாவளியேன்றே அட்வான்ஸாக கொண்டாடுகிறது சன் டிவி. சன் பிக்சர்ஸ் தயாரித்த படம்தான் ஜெயிலர் என்பது நினைவிருக்கலாம்.
ரஜினிகாந்த், தமன்னா, விநாயகன், மாரிமுத்து உள்ளிட்டோர் நடிக்க, நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான பிரமாண்டப் படம்தான் ஜெயிலர். மிகப் பெரிய வசூலைப் பெற்று அசத்திய படம் ஜெயிலர்.

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் செய்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் ஜெயிலர் படம் சன் டிவியில் நவம்பர் 12ம் தேதி தீபாவளியன்று ஒளிபரப்பப்படவுள்ளது. சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் வருகிறது. இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ரஜினியின் பிறந்த நாளை அட்வான்ஸாக ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளியுடன் சேர்த்து ரஜினி ரசிகர்களை குளிர்விக்கவுள்ளது சன் டிவி.
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
{{comments.comment}}