சென்னை: அரண்மனை 4 பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளது. மிரட்டும் வகையிலான பர்ஸ்ட் லுக்கும் கூட படக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சிக்கு பெரும் பெயர் பெற்றுக் கொடுத்த படங்கள் வரிசையில் அரண்மனைக்கும் முக்கிய இடம் உண்டு. இதில் முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 3வது பாகம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. ஆனால் படம் பேசப்பட்டது. இந்த நிலையில் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தைக் கையில் எடுத்துள்ளார் சுந்தர் .சி.
அரண்மனை 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தை பொங்கலுக்கு திரைக்குக் கொண்டு வரவுள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளன. சுந்தர்.சியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாதான் அரண்மனை 4 படத்திற்கு இசையமைக்கிறார்.
சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
2014ம் வருடம் அரண்மனை 1 வெளியானது. இதில் ஆன்ட்ரியா, வினய் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து 2016ல் அரண்மனை 2 படத்தை எடுத்தார் சுந்தர் .சி. அதில் நாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். இப்படமும் வசூலில் சாதனை படைத்தது. அதன் பின்னர் அரண்மனை 3ம் பாகம், 2021 ல் ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷிஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது.
இந்த நிலையில் அரண்மனை 4 ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவின் பிறந்த நாளான நேற்று இப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}