Sunday Message: சிறுமையை நினைக்கும் கர்த்தர்!

Apr 02, 2023,10:37 AM IST
- கோல்டுவின் ஆசிர்

"செத்தவனைப் போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன். உடைந்த பாத்திரத்தை போலானேன்"

சங்கீதம் 31:12

ஓர் ஊரின் ஒதுக்குப்புறமாக குளம் ஒன்று இருந்தது. சமீபத்தில் பெய்த மழையில் குளத்தில் ஏராளமான தாமரைப் பூக்கள் பூத்திருந்தன. ஆனால் அந்த ஊர் ஜனங்கள் குளத்தின் அருகில் கூட வருவதில்லை. அந்த குளம் மக்களால் முழுவதும் மறக்கப்பட்ட குளமாக இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு புகைப்பட கலைஞர் அந்த குளத்தை ரசித்து நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். மேலும் அங்கு உள்ள தாமரைப் பூக்களையும் பறித்துக் கொண்டு ஊருக்குள் வந்தார். அந்த புகைப்படத்தையும் பூக்களையும் பார்த்த ஊர் மக்கள் இவ்வளவு நாள் இந்த அழகான குளத்தை மறந்துவிட்டோமே என்று வருந்தினர். அந்த புகைப்படக் கலைஞரோ தான் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பதிவிட்டு உலகம் அறிய செய்தார். அவ்வளவு நாள் மறக்கப்பட்ட குளமானது ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றது. 




நம்மில் கூட பலரும் சொந்தம், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லாராலும் மறக்கப்பட்டு இருக்கலாம். ஏசாயா 49:15 யில் ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ. அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். வேதாகமத்தில் யாக்கோபு லேயாளை விட ராகேலை அதிகம் விரும்பினார். லேயாள் அற்பமாக என்னப் பட்டாள். தன்னை கணவன் நேசிக்காததால் மிகவும் வியாகுலப்பட்டாள். ஆனால் எந்த வித எதிர் நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை. கர்த்தர் லேயாளைக் கண்டார். அவள் கர்ப்பத்தை ஆசீர்வதித்து பிள்ளைகளை கொடுத்தார். அவளது வம்சத்தில் தான் மேசியா வந்து பிறந்தார். ராகேல் அல்ல லேயாளே ஆபிரகாமின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டாள். 

இன்றைக்கும் கணவனால் அற்பமாக என்னப்படும் மனைவியர் உண்டு, உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அற்பமாக என்னப்படும் மனிதர்களும் உண்டு, வேலையிடங்களில் புறக்கணிக்கப்படுபவர்கள் உண்டு. கலங்காமல் கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருப்பவர்கள் மேல் நிச்சயம் ஆறுதல் உண்டாகும். பொறுமையாய் இருப்பவர்களின் ஆசீர்வாதம் கர்த்தரிடத்தில் இருந்து வருவதனால் பெரிதாய் இருக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்