- மஞ்சுளா தேவி
சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் படக்குழுவினர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து மற்றும் பாராட்டை பெற்றுள்ளனர். இதை மிகப் பெருமையாக அனைவருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியானது. இது அவர் ஏற்கனவே எடுத்து ஹிட் கொடுத்த ஜிகர்தண்டாவின் 2வது பாகம்தான். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது. இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் ஜிகர்தண்டா டபுள் லேட்டஸ்ட் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலேயே வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக தான் இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது.

படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஜிகர்தண்டா 2 படம் ஒரு குறிஞ்சி மலர் என குறிப்பிட்டு கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு..சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸ் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ் ஜே சூர்யா திரை உலகின் நடிகவேள் என குறிப்பிட்டு இருந்தார்
இந்நிலையில் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர். இதில் ரஜினி, ராகவா லாரன்ஸ், எஸ் .ஜே சூர்யா ,இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணர், மற்றும் உதவி இயக்குனர்கள் இடம் பெற்றனர். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்ததை மிகவும் பாராட்டினாராம். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யாவுக்கு ரஜினி ஸ்பெஷலாக பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் ,கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு.. அற்புதமான நடிப்பை தருவது எஸ் ஜே சூர்யாவிற்கு வழக்கமாகிவிட்டது. நடிகரான ராகவா லாரன்ஸ் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}