மும்பை: இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியை தனது மனைவி லதா ரஜினிகாந்த், மைத்துனர் ரவி ராகவேந்தர் ஆகியோருடன் நேரில் பார்த்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்தியா நியூசிலாந்து அரை இறுதிக் கிரிக்கெட் போட்டியை இன்று ஏகப்பட்ட பிரபலங்கள் நேரில் வந்து பார்த்து ரசித்தனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் போட்டியைக் காண குவிந்திருந்தனர். அதேபோல நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் நேரில் சென்று போட்டியைப் பார்த்து ரசித்தார்.

ரஜினிகாந்த்துடன், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மைத்துனர் ரவி ராகவேந்தர் (இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை) ஆகியோரும் போட்டியைக் காண வந்திருந்தனர். இந்தியாவின் அதிரடி பேட்டிங்கைக் கண்டு மகிழ்ந்து கை தட்டி ரசித்துப் பார்த்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் செம பிசியாக இருந்து வருகிறார். ஜெயிலர் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இடை இடையே பிற நடிகர்களின் படங்களையும் பார்த்து பாராட்டுகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்து ரசித்ததோடு மட்டுமல்லாமல் நீண்டதொரு கடிதத்தையும் அந்தக் குழுவுக்கு அனுப்பி மகிழ வைத்தார். கூடவே டீமையும் அழைத்துப் பாராட்டிப் பேசினார். ஒவ்வொருவருடனும் தனித் தனியாக போட்டோவும் எடுத்துக் கொண்டு மகிழ்வித்தார்.
நேற்று விடுவிடுவென மும்பைக்குக் கிளம்பி வந்து இன்று போட்டியைப் பார்த்து மகிழ்கிறார். சூப்பர் ஸ்டார்னா சும்மாவா... சும்மா கலக்குறாருல்ல!
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}