15 மாத சிறைவாசம் முடிந்தது..செந்தில் பாலாஜிக்குக் கிடைத்தது நிபந்தனை ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Sep 26, 2024,08:12 PM IST

சென்னை:   முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளாகி, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையெல்லாம் நடந்தது. அதன் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும் ஏற்கவில்லை. இதனால் ஜாமின் கிடைக்காமல் தொடர்நது சிறைவாசம் அனுபவித்து வந்தார் செந்தில் பாலாஜி.




இந்த நிலையில் கடந்த 15 மாதமாக வெறும் விசாரணைக் கைதியாகவே தான் சிறையில் அடைபட்டிருப்பதாகவும், உடல் நிலை சரியில்லை என்றும் கூறி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மே  மாதம் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பை   ஒத்திவைத்திருந்தது. 


இன்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டது. அதன்படி தினசரி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2 நபர் உத்தரவாதத்தின்பேரில் செந்தில் பாலாஜி ஜாமின் பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


திமுகவினர் கொண்டாட்டம்


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துள்ளதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் திமுகவினரர் பட்டாசு வெடித்தும் லட்டு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்