கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மேற்படிப்பு படித்து வந்துள்ளார் பயிற்சி மருத்துவர். இவர் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி இரவு பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த மாதம் 9ம் தேதி கல்லூரி கருத்தரங்கு அறையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் செய்த விசாரணையில், பணியில் உடன் இருந்த மருத்துவரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. மருத்துவக் கல்லூரியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடூரமான இந்த பாலியல் பலாத்கார, கொலைச் சம்பவத்திற்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நாடு முழுவதிலும் பல இடங்களில் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர். மருத்துவ மாணவி படுகொலை செய்யப்பட்டதற்கு கொல்கத்தாவில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சம்பவம் நடந்த மருத்துவமனைக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்பினால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பாடது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.மேலும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு பணி விடுப்பு எடுக்கும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் போராட்டத்தை கை விட மாட்டோம் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றுள்ளது. மாநில போலீசிடம் இருந்து சிபிஐக்கு விசாரணை சென்றுள்ளது. ஆனால், நீதி என்பது இன்னும் கிடைக்கவில்லை. சுகாதார அமைப்பை சீர்குலைந்துள்ளதாக மாநில அரசு கூறியது தவறானது என்று பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}