சூரத்: நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முகேஷ் தலால் என்பவர் போட்டியின்றி தேர்வாகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட மனு செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர், அவரது டம்மி வேட்பாளர் ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 8 சுயேச்சைகளும் ஒட்டுமொத்தமாக தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸுக்கு எதிராக குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருந்தவர்களை கடத்திக் கொண்டு போய் விட்டது பாஜக. இந்த வெற்றி சத்தியத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது.

சூரத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானி என்பவர் வேட்பு மனு செய்திருந்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக சுரேஷ் பட்சாலா என்பவர் மனு செய்திருந்தார். மேலும் 8 சுயேச்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களில் இடம் பெற்றிருந்த கையெழுத்துக்கள் சரியாக இல்லை என்று கூறி அவற்றை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
இந்த நிலையில் திடீரென 8 சுயேச்சை வேட்பாளர்களும் ஒட்டுமொத்தமாக மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் பாஜக வேட்பாளர் மட்டும் தற்போது களத்தில் உள்ளார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.
சூரத் எம்.பியாக போட்டியின்றி தேர்வாகும் தலால், சூரத் மாநகராட்சியில் நிலைக்குழு தலைவராக இருந்தவர். தற்போது சூரத் நகர பாஜக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
சூரத்தில் பாஜக வெற்றி பெற்ற விதத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறுக்கு வழியில் வந்த வெற்றி என்று அது வர்ணித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}