சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரே இப்படி இருக்கு என்றால் படம் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ரவி ராகவேந்திர மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். 3டி தொழில்புட்பத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இமையமைத்து உள்ளார். ஏற்கனவே வெளியான ஃபயர் பாடல் ரசிகர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றது. கங்குவா திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியிருப்பதாகவும், இரண்டு பாகங்களையும் இயக்குனர் தற்போது முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தை வெளியிட்ட பின்னர் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்த்த பின்னர் தான் 2ம் பாகத்தை வெளியிட சிவா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.கங்குவா படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்,கன்னடம் உள்பட பல மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். சிறுத்தை, விஸ்வாசம்,வீரம், வேதாளம், அண்ணாத்த ஆகிய கமர்ஷியல் படங்களை இயக்கிய சிவா தற்போது பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக கங்குவா படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர் சிவாவின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுடன் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் சூர்யா. இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படம் வசூலிலும் சாதனை படைக்கும் என்று ரசிர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}