திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதுரையைச் சேர்ந்த ராம சீனிவாசனை களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும் என்று திருச்சி பாஜக பிரமுகர் சூர்யா சிவா பகிரங்கமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில், லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையில் வலுவான அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ஜான்பாண்டியன் கட்சி, ஓபிஎஸ், டிடிவி தினகரனின் அமுமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சரத்குமார் தனது கட்சியையே இதில் கொண்டு வந்து சேர்த்து விட்டார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆளுநராக இருந்து வந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது அந்த பதவியை உதறிவிட்டு பாஜகவில் இன்று இணைந்தார். அவருக்கு அண்ணாமலை உறுப்பினர் அட்டையை கொடுத்து வரவேற்றார்.
இந்த நிலையில் திருச்சியில் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. திருச்சியில் மதுரையைச் சேர்ந்த மாநிலத் துணைத் தலைவர் ராம சீனிவாசனை வேட்பாளராக அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும் திருச்சி பாஜகவின் முக்கிய பிரமுகருமான சூர்யா சிவா கடும் ஆட்சியபனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் மண்ணின் மைந்தரை களம் இறக்குங்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ராம சீனிவாசனை களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். வெற்றியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக திருச்சி பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யா சிவா தீவிர அண்ணாமலை ஆதரவாளர். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் ராம சீனிவாசனுக்கு எதிராக கொடி தூக்கியிருப்பது பாஜகவினரை அதிர வைத்துள்ளது. ராம சீனிவாசன் வேட்பாளராக களம் இறக்கப்படுவாரா அல்லது அவருக்கு பதில் உள்ளூரைச் சேர்ந்த வேறு யாராவது நிறுத்தப்படுவார்களா? அல்லது சூர்யா சிவாவே வேட்பாளர் ஆக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}