மும்பை: நடிகர் சைப் அலி கான் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றபோது கத்தியால் குத்தி அவரைக் காயப்படுத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அந்த நபருக்கும், தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று காவல்துறை விளக்கியுள்ளது.
நடிகர் சைப் அலிகானின் வீடு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ளது. இந்த வீட்டுக்குள் அதிகாலையில் நுழைந்த ஒரு நபர் அங்கு திருட்டில் ஈடுபட முயன்றதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் சைப் அலிகானை அவர் சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சைப் அலிகான் கத்திக் குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர் சிகிச்சை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார், பல்வேறு படைகளை அமைத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். சிசிடிவி காட்சிப் பதிவுகளை வைத்தும் தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இதில் ஒரு நபர் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.
அந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அவரை போலீஸார் பந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் அங்கு வைத்து விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணைக்குப் பின்னர் அந்த நபருக்கும், சைப் அலிகான் தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்ததாக காவல்துறை தெளிவுபடுத்தியது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சைப் அலி கான் தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க, கிட்டத்தட்ட 20 தனிப்படைகளை அமைத்து குற்றவாளியை போலீஸார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
பந்த்ராவில் 12 மாடிக் கட்டடத்தில்தான் சைப் அலிகானின் வீடு உள்ளது. இதில் நான்கு மாடிகளில் சைப் அலிகான் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சைப் அலிகானின் வீட்டில் வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கு தெரிந்தவர்தான் கத்திக் குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்த அந்த நபர், பணிப்பெண்ணிடம் ஏதோ தகராறு செய்துள்ளார் என்று தெரிகிறது. இதை சைப் அலிகான் தட்டிக் கேட்டபோதுதான் அவர் தாக்கப்பட்டார். எனவே அந்த நபர் பணிப் பெண்ணைக் குறி வைத்து வந்திருக்கலாம்.. இடையில் சைப் அலிகான் குறுக்கிட்டதால் ஆத்திரத்தில் அவரைக் குத்தி விட்டு தப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் பாதுகாப்பு மிக்க வீட்டுக்குள் அந்த நபர் எளிதாக புகுந்து ஊடுறுவியதுதான் இப்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}