"அட மண்டு.. 24 வரைக்கும் வச்சிருப்பாங்களா".. யாரைச் சொல்கிறார் எஸ்.வி.சேகர்?

Mar 17, 2023,04:51 PM IST

சென்னை: நடிகரும், பாஜக வைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் போட்டுள்ள டிவீட்டால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். சரமாரியாக அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.


பாஜகவைச் சேர்ந்தவரான நடிகர் எஸ்.வி.சேகர் தற்போது தீவிரமான அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பாக அண்ணாமலை தலைவரான பிறகு பலரும் கூட ஒதுங்கி விட்டனர். அதில் எஸ்.வி.சேகரும் ஒருவர்.


எஸ்.வி.சேகர் நகைச்சுவையில் மன்னன். அவர் போடும் நாடகங்களில் இடம் பெறும் "தமாஷ் துனுக்குகள்" போலவே அவரது டிவீட்டும், அவரது பேச்சும், கருத்திலும் நகைச்சுவை தெறித்து வெடிக்கும். அந்த வகையில் சமீப காலமாக அவர் போட்டு வரும் டிவீட்டுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.




முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி  விஜயக்குமாரை நேரில் சந்தித்து அதுகுறித்து ஒரு டிவீட் போட்டார் எஸ்.வி.சேகர். அதில்"உண்மையான சிங்கம்"என்று அவர் கேப்ஷன் போட்டதால் சலசலப்பு  ஏற்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலையை அவரது ஆதரவாளர்கள் சிங்கம் என்று செல்லமாக அழைப்பது குறிப்பிடத்தக்கது.


அதற்கு  சில நாட்களுக்கு முன்பு , ஒரு மீம் போட்டிருந்தார். அதில், பரோட்டா மாஸ்டருக்கு என்ன கோவம்.. நான் பரோட்டா போட வரவில்லை. கல்லாலதான் உட்காருவேன்னு அடம்.. அப்புறம்.. அவருக்கு முன்னாடி வேலைக்கு சேந்தவங்க, சாப்பிட வந்தவங்க எல்லோரும் எதுத்த ஹோட்டலுக்குப் போயிட்டாங்க என்று இடம் பெற்றிருந்தது.. இதுவும் சர்ச்சையானது. காரணம், "நான் இட்லி, தோசை  சுடுவதற்காக பாஜக தலைவராகவில்லை" என்று அண்ணாமலை பேசியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது இன்னொரு டிவீட்டைப் போட்டு அண்ணாமலை ரசிகர்களை கொந்தளிக்க வைத்து விட்டார் எஸ்.வி.சேகர்.. அந்த டிவீட்டில் இப்படி உள்ளது.


"தம்பி ஆபீஸ் போகலியா"  

"எதுத்த வீட்டு பையன் பக்கத்து வீட்டு பையன் ஆபீஸ் போறாங்களா? நானும் வீட்டுலயே வேலை செய்வேன்".

"அட மண்டு அவங்க கம்பெனி முதலாளி. நீ வெறும் பிரான்ச் மேனேஜர் 24 வரைக்கும் உன்னை வேலயில வச்சிருப்பாங்களான்னே தெரியலை. இனிமே பழைய வேலைக்கும் போகமுடியாது. கிளம்பு"!


இதில் மண்டு என்று யாரைச் சொல்கிறார்.. "24" என்று எதைச் சொல்கிறார்.. "பழைய வேலை"என்று எதைச் சொல்கிறார்... என்று "சத்தியமாக" நமக்கு தெரியவே தெரியைலங்க.. உங்களுக்கு ஏதாவது புரியுதா!


சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்