திருப்பதி: தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளது. இதனால், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், இங்கு பக்தர்கள் கூட்டம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். தற்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருவதால் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டைய மாநிலஙகளிலும் அதன் கோர தாண்டவத்தை காண்பித்து தான் வருகின்றது. இந்த புயல் மற்றும் கன மழை காரணமாக ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மலைச்சரிவுகளில் மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்தும் இதனால் பரவலாக அனைத்து இடங்களிலும் பதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பதியில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியும் குளிரில் நடுங்கியபடியும் தரிசனம் செய்து வருகின்றனர். மழையால் திருப்பதி மலையில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. மலைப் பாதையில் செல்லும் இடங்களில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. மேகக் கூட்டங்களால் திருப்பதி மலை ரம்மியமாக காட்சியளிக்கிறது.
தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. இதனால் நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பக்தர்கள் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். பல நாட்கள் தங்கியும், பல மணி நேரம் காத்திருந்து வந்த பக்தர்கள் தற்போது புயல் மழை காரணமாக 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}