மதுரை மீனாட்சி நகரின் காதல்!

Feb 14, 2026,05:10 PM IST

- தி.மீரா


மதுரையின் காலை எப்போதும் கோவில் மணி ஓசையாலும், தெரு தேநீர் வாசனையாலும் தொடங்கும். அந்த நகரில் வாழ்ந்தான் ஆதவன் — வரலாற்றைப் பிடிக்கும், அமைதியான இளைஞன்.


அதே பகுதியில் இருந்தாள் மரியம் — புத்தகங்களை நேசிக்கும், பிறருக்கு உதவ விரும்பும் பெண். இருவரும் மதுரை நூலகத்தில் அடிக்கடி சந்தித்தார்கள்.


முதலில் புத்தக பரிந்துரைகள், பிறகு படிப்பு உதவி, அதன் பின் நல்ல நட்பு.  ஒருநாள் மதுரைச் சித்திரை திருவிழா பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். ஆதவன் அந்த விழாவின் வரலாற்றை சொன்னான்.


மரியம் அதில் உள்ள ஒற்றுமை செய்தியைப் பகிர்ந்தாள். அவர்களுக்கு புரிந்தது  மதுரை போலவே, அவர்கள் மனங்களும் பல நிறங்கள் கொண்டவை என்று. நட்பு ஆழமான அன்பாக மாறியது. ஆனால் இருவரும் ஒரு முடிவு செய்தார்கள்: 




“முதலில் நம்ம குடும்பம் நிம்மதியாக இருக்கணும்.” அவர்கள் தங்கள் வீட்டில் திறந்த மனதுடன் பேசினார்கள்.

“நம்பிக்கைகள் வேறானாலும், மனசு நல்லதா இருந்தா போதும்,” என்றார்கள். 


குடும்பங்கள் நேரம் எடுத்துக் கொண்டன. ஆனால் அவர்கள் இருவரின் பண்பு, மரியாதை, பிறருக்கு உதவும் மனம் 

இவையே இறுதியில் பதில் சொன்னது. சிறிய விழாவில், இரு குடும்பங்களும் சேர்ந்தனர்.


யாரும் யாரின் நம்பிக்கையை மாற்றவில்லை; ஆனால் ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக்கொண்டனர். பின்னர் ஆதவன், மரியம் இருவரும் மதுரையில் ஏழை குழந்தைகளுக்கு இலவச படிப்பு மையம் தொடங்கினர். அவர்களின் அன்பு இரு இதயங்களை மட்டும் அல்ல, பல எதிர்காலங்களையும் இணைத்தது.


மதுரை கோபுரங்கள் வானத்தை தொட முயல்வது போல, அன்பு மனித மனங்களை இணைக்க முயலும்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்