T20 World Cup: அரை இறுதியில் இந்தியா.. இங்கிலாந்துடன் நேருக்கு நேர்.. ஆஸ்திரேலியாவின் பரிதாப நிலை!

Jun 25, 2024,08:48 AM IST

செயின்ட் லூசியா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில், ஒரு நாள் உலக கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசத்தின் வெற்றி தோல்வியை நம்பியிருக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் தற்போது சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. அவையும் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டன. நேற்று நடந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. 


இப்போட்டியில் ஆஸ்திரேலியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலை. அது மட்டுமல்லாமல், ஏகப்பட்ட கண்டிஷன்களும் அந்த அணிக்கு இருந்தன. அதையெல்லாம் பூர்த்தி செய்து வென்றால் மட்டுமே அது அரை இறுதியை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நெருக்கடியில் இந்தியாவை சந்தித்தது.




மறுபக்கம் இந்தியாவுக்கு அப்படியெல்லாம் எந்தவிதமான அழுத்தமும் இல்லை. ஜஸ்ட் ஜெயித்தால் போதும் என்ற நிலையில் தான் இந்தியா இருந்தது. இந்த நிலையில் இந்திய அணி பிரமாதமாக ஆடி ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் ஜம்மென்று நுழைந்து விட்டது. ரோஹித் சர்மா மின்னல் வேகத்தில் ஆடி 41 பந்துகளில் 92 ரன்களைக் குவித்து மிரட்டி விட்டார். அத்தோடு, ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற வேதனைக்கும் பழி தீர்த்து விட்டார்.


இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை எடுத்தது.  சேசிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் நம்பிக்கை அளித்தனர். ஆனால் அவர்கள் அவுட்டான பிறகு போட்டி இந்தியாவின் ஆதிக்கத்திற்குள் வந்து விட்டது. 7 விக்கெட்களை இழந்து 181 ரன்களை  மட்டுமே ஆஸ்திரேலியாவால் எடுக்க முடிந்தது. 


4வது அணியாக நுழையப் போவது யார்?


ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் வந்து விட்டன. 3வது அணியாக இந்தியா தற்போது நுழைந்துள்ளது. 4வது அணி யார் என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் முட்டி மோதிக் கொண்டுள்ளன. 3 அணிகளுக்குமே அரை இறுதிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவை எப்படி ஜெயிக்க வேண்டும் என்றும் அழுத்தங்கள் உள்ளன. அதைத் தாண்டி வந்தால் மட்டுமே இந்த அணிகளில் ஒன்று அரை இறுதிக்குள் நுழைய முடியும்.


குரூப் 2ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளன. இதிலிருந்து 2 அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். முதல் அணியாக இந்தியா போய் விட்டது. அடுத்த அணி யார் என்பதில் தான் தற்போது போட்டியே. ஆஸ்திரேலியா 2 புள்ளிகள், -0.331 என்ற ரன் ரேட்டுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகள், -0.650 ரன் ரேட், வங்கதேசம் ஜீரோ புள்ளி, -2.489 ரன் ரேட்டுடன் உள்ளன.  இதில் எந்த அணி எப்படி ஜெயித்தால் அரை இறுதிக்குள் போக முடியும் என்பதைப் பார்ப்போம்.




கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானும் வங்கதேசமும் மோதவுள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணி ஜெயித்து விட்டால் அது அரை இறுதிக்குள் போய் விடும். புள்ளிகள் அடிப்படையில் அது எளிதாக முன்னேறி விடும்.


ஒரு வேளை ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திடம் 61 ரன்கள் அல்லது அதற்கு குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 13 ஓவர்களுக்குள்ளாக தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்குத் தகுதி பெறும்.


வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தால் அரை இறுதிக்குத் தகுதி பெற முடியும். அதாவது 61 ரன்கள் வித்தியாசம் அல்லது 160 ரன்கள் என்ற இலக்கை 13 ஓவர்களில் எட்டிப் பிடித்து வென்றால் இது சாத்தியமாகும்.


பார்க்கலாம்.. இதில் எந்த அணிக்கு அதிர்ஷ்டம் அடித்து அரை இறுதிக்குள் வரப் போகிறது என்பதை. இதில் வென்று உள்ளே வரும் அணி அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்