சென்னை: அரண்மனை 4 படத்தில் காட்சிகள் சவாலாக இருந்தாலும், மிகவும் ஜாலியா இருந்தது. அனைத்து சண்டை காட்சிகளிலும் நான் தான் நடித்தேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக உள்ளது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
பேய் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படித்தான் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 பாகங்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் இரண்டு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 3வது பாகம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. 2014ம் வருடம் அரண்மனை 1 வெளியானது. இதில் ஆன்ட்ரியா, வினய் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டடித்தது.
அதைத் தொடர்ந்து 2016ல் அரண்மனை 2 படத்தை எடுத்தார் சுந்தர் .சி. அதில் நாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். இப்படமும் வசூலில் சாதனை படைத்தது. அதன் பின்னர் அரண்மனை 3ம் பாகம், 2021 ல் ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இந்த நிலையில் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தைக் கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி.
அரண்மனை 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுந்தர் சியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாதான் அரண்மனை 4 படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை குஷ்புவின் அவிணி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி மற்றும் திகில் நிறைந்த கதை அம்சத்துடன் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா கூறுகையில், அரண்மனை 4 படத்தில் நடிப்பது சவாலாக இருந்தாலும் மிகவும் ஜாலியா இருந்தது. அனைத்து சண்டை காட்சிகளிலும் நான்தான் நடித்தேன். இந்ந படத்தின் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமன்னா சண்டைக் காட்சியில் நடிப்பது போன்ற ஒரு சீனும், சாப்பிடுவது போன்ற காட்சியையும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார் தமன்னா.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}