சென்னை: சென்னை நகரிலும், புறநகர்கள் பலவற்றிலும் இன்று பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
மின்சார பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்சார வயர்கள் சரியாக இருக்கின்றனவா, மரக் கிளைகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றனவா என்பது உள்ளிட்டவை சரி பார்க்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மின்சார பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும். 2 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பல்லாவரம், சோழிங்கநல்லலூர், அடையார், கிண்டி, போரூர், கே.கே.நகர், தாம்பரம், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்பது குறித்த பட்டியலையும் டான்ஜெட்கோ வெளியிட்டுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}