"பிடி பிடி.. விடாதே".. தச்சங்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு.. செம விறுவிறுப்பு!

Jan 06, 2024,01:35 PM IST
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலகலமாக தொடங்கி நடந்து வருகிறது

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான  பொங்கல் பண்டிகை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகள் நடைபெறும். அதிலும் ஜல்லிக்கட்டுதான் டாப்பில் இருக்கும். விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி  தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம்.   இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி சீசன் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்,  தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுகள்தான்.



இதில், ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி உள்ளது. இதற்கான பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வந்தன. வாடிவாசல், பேரிகார்டு, காளைகளுக்கு பயிற்சி என் பல முன்னேற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே  நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இன்று கோலகலமாக தொடங்கியது ஜல்லிக்கட்டு. மாநில சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி போட்டியைத் தொடங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுளள்ளன. மாடுகள் சீறிப் பாய, மாடு பிடி வீரர்கள் உற்சாகத்துடன் இறங்கியுள்ளனர். மாடுகள் பலமா, அதைப் பிடிக்கத் துடிக்கும் காளையர்கள் பலமா என்ற போட்டா போட்டி தச்சங்குறிச்சியைக் கலக்கிக் கொண்டுள்ளது. 

போட்டிகளை காண ஏராளமானோர் வருகைதந்துள்ளனர். தச்சங்குறிச்சியே தற்பொழுது விழாக்கோலம் பூண்டுள்ளது. பலத்த பாதுகாப்புடனும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடனும் போட்டி நடந்து வருகிறது. கட்டில், சேர், மிக்ஸி, பீரோ என விதம் விதமான பரிசுகள் காளையர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்