யாராவது அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னா.. செருப்ப எடுத்து அடிங்க.. அதான் ஒரே வழி.. நடிகர் விஷால் அதிரடி!

Aug 29, 2024,05:59 PM IST

சென்னை:   சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்மென்ட் கேட்பவர்களை உடனே செருப்பால அடிங்க. எனக்கு நடிகை ஸ்ரீரெட்டி குறித்துத் தெரியாது. அவர் யாருன்னே தெரியாது.. அவர் செஞ்ச சேட்டைகள்தான் தெரியும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. சிறுமிகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என வயது வித்தியாசம் இன்றி தற்போது பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு எல்லாம் ஒரு தீர்வு என்றைக்கு கிடைக்கும் என்று பல பெண்கள் ஏங்கி வரும் நிலையும் தற்போது அதிகரித்து வருகிறது. 




வருங்காலத்தில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும் அதிக பயத்துடனே இருந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி சினமா உலகிலும் பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன. நமக்கு தெரிந்து வெளி வரும் பாலியல் சீண்டல்களை தவிர தெரியாத பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை எண்ணிலடங்காதவை என்றே சொல்லலாம். சமீபத்தில் மலையாளத் திரையுலகில் வெடித்த குண்டுதான் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை.


இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து நடிகர் விஷால் அளித்த பேட்டியில், கேரளாவை போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தமிழ் நடிகர் சங்கம் நிற்கும். எவனோ ஒருத்தன் சினிமா வாய்ப்புக்காக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூப்பிடுவான். பெண்ணை மதிக்காமல் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முயற்சி பண்ணுவாங்க. இதை எல்லாம் தவிர்க்க ஒரே ஒரு விஷயம் இருக்கு, என்னன்னா அந்தப் பெண்ணிற்கு மன தைரியம் வேணும். அந்தப் பெண்மணி அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா அந்த மாதிரி ஆட்களை செருப்பால அடிக்கணும். அதுதான் நான் சொல்வேன். 


தமிழ்நாட்டில் 10 பேர் கொண்ட குழு வைத்து ஒரு விஷயம் பண்றோம். அதற்கான ஏற்பாடுகள் போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு அறிவிப்பு சீக்கிரம் வரும். அதைச் செய்ய வேண்டியது எங்களுடைய கடமை. இப்ப நடிகர் சங்கம் என்பது வெறும் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் சரிசமமாக இருக்காங்க. பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது எங்களுக்காக இருக்காங்களா என்று கேட்கும் போது அவங்களுக்கு நடிகர் சங்கம் நாங்கள் இருக்கிறோம் என்று தைரியம் கொடுப்போம்.


மலையாள சினிமாவைப் போல தமிழ் சினிமாவிலும் காலம் காலமாக குற்றச்சாட்டு இருந்து கொண்டுதான் உள்ளது. இங்கும் அதுபோல் பிரச்சனைகள் உள்ளது. தமிழ் திரையுலகில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.


ஸ்ரீரெட்டியைத் தெரியாது - விஷால்




அப்போது செய்தியாளர்கள் நடிகை ஸ்ரீரெட்டி முன்பு  உங்கள் மீது பாலியல் புகார்கள் கூறியிருந்தாரே என்று கேட்டபோது, அவரை யாருன்னே தெரியாதுங்க. அவர் செஞ்ச சேட்டைகள் மட்டும்தான் தெரியும் என்று சிரித்தபடி பதிலளித்தார் விஷால்.


ஒரு காலத்தில் நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் தெலுங்கு நடிகர்கள் பலர் குறித்து பரபரப்பான செக்ஸ் புகார்களைக் கூறி வந்தார். இதில் பல முன்னணி நடிகர்களும் அடக்கம். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஷால் மட்டுமல்லாமல் பவன் கல்யாண் உள்ளிட்டோர் மீதும் கூட அவர் புகார் கூறியிருந்தார். 


தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், விஷால், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் மீது அவர் புகார் கூறியிருந்தார். பின்னர் அது அடங்கிப் போயிருந்தது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்