சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதையும் தாண்டி தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
தீபாவளிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளிக் கொண்டாடங்கள் களை கட்டியுள்ளன. காலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு, பட்டாசு வெடித்து தீபாவளியைத் தொடங்கினர். பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளதால் காலையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். காலை கோட்டா முடிந்து விட்ட நிலையில் அடுத்து மாலை வரை மக்கள் வெயிட் பண்ண வேண்டும். இருந்தாலும் பல பகுதிகளில் பகலிலும் கூட பட்டாசுகளை வெடிக்கத்தான் செய்கின்றனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கும் நேரம் பார்த்து மழை வந்து விட்டது. இதனால் மழை ஓய்ந்த பின்னர் மக்கள் பட்டாசு வெடித்தனர்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். எல்லாப் பகுதிகளிலுமே கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டது.
கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் பலியான கரூரிலும் கூட தீபாவளிக் கொண்டாட்டங்கள் காணப்பட்டன. அதேசமயம், சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் அமைதியான முறையில் தீபாவளியை மக்கள் கொண்டாடினர்.
மழை பெய்து வரும் நிலையில் பல ஊர்கள் உள்ள நிலையிலும் கூட மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}