சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. நாளை விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று மாநில பாஜக தேர்தல் அதிகாரியான எம்.சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருந்து வருகிறார். அவரது பதவிக்காலத்தில் 2021 சட்டசபை பொதுத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என இரு பெரும் தேர்தல்களை தமிழ்நாடு பாஜக சந்தித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலை மாற்றப்படவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான பணிகள் தொடங்கியுள்ளன.
மாநில பாஜக துணைத் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் திருவிழாவில் இறுதிக்கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்ட தலைவர் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநில தலைவர் மற்றும் தேசிய பொது குழு உறுப்பினர் தேர்தலுக்கான விருப்பம் பணிகள் வரவேற்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளமான http://bjptn.com/ என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாளை 11.4.2025 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்பமனுவை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில தலைவர்கள் பதவிக்கு போட்டியிட விரும்புபவரகள் எப் படிவம் பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொது குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்
தேசிய பொது குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் இ பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும் என்று தனது அறிக்கையில் மாநிலத் துணைத் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான எம் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை - அண்ணாமலை
தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. எனவே விருப்ப மனு தாக்கல் செய்ய மாட்டேன் என்று அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அண்ணாமலையின் சகாப்தம் தமிழ்நாடு பாஜகவில் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. அனேகமாக 12ம் தேதியன்று புதிய பாஜக தலைவர் தேர்வாகி விடுவார் என்று தெரிகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}