சென்னை: சென்னையில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியபோது வராத மாநிலத் தலைவர் அண்ணாமலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத் தாமதத்திற்குப் பின்னர் வருகை தந்தார்.
பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று அதிமுக கூறி விட்டது. ஆனால் அதை பாஜக மேலிடம் இதுவரை பகிரங்கமாக ஏற்கவில்லை. மாறாக, ரகசியப் பேச்சுக்களில் அது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலையையும் அது நேரில் அழைத்துப் பேசியது. அப்போது என்ன தகவல் பரிமாறப்பட்டது என்பது தெரியவில்லை.
பாஜக-அதிமுக இடையே கூட்டணி விவகாரம் இன்னும் தெளிவில்லாமல்தான் இருக்கிறது. அண்ணாமலை மட்டுமே அதிமுகவின் குறி என்பதால் அவரை ஒதுக்கி வைத்து விட்டு பிரச்சினையை சமாளிக்க முடியுமா என்பது குறித்து பாஜக யோசித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று நேரில் பார்த்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு முன்பாக அதிமுக தலைவர்கள் குழு, டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று திருப்பியதும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் அவருடைய நடைப்பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் 2வாரங்களுக்கு பெட் ரெஸ்ட் எடுக்க டாக்டர் அறிவுறுத்தியுள்ளனர். இந்தத் தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. இக்கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல் நலக்குறைவுடன் அவர் வருவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் அவர் வராத நிலையில், எச். ராஜா, கேசவ விநாயகம் போன்ற மூத்த தலைவர்கள் முன்னிலையில் வந்தே மாதரம் பாடலுடன் கூட்டம் தொடங்கியது. அண்ணாமலை தாமதமாக வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அண்ணாமலை கூட்டத்திற்கு வருகை தந்தார்.
இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் வெல்லக் கூடிய உத்திகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. 39 தொகுதிகளிலும் முழுநேரப் பணியாளர்களைக் கொண்டு தேர்தல் பணியாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}