சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பங்காரு அடிகளார் முக்தி அடைந்ததை ஒட்டி இன்று நடைபெற இருந்த அண்ணாமலை யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அக்டோபர் 19ம் தேதி முக்தி அடைந்தார். இவர் மேல்மருவத்தூரில் பல கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகலை நிறுவியவர். இவரது மறைவிற்கு பொது மக்கள் மற்றும் பக்தர்கள் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவர் முக்தி நிலை அடைந்ததை அறிந்த பாஜக தமிழக தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தி அடைந்தார் என்ற செய்தியை தொடர்ந்து அம்மாவின் பிரிவு துயராற்ற, அடுத்து இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன்.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}