டெல்லியில் அண்ணாமலை.. அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அவசர சந்திப்பு

Oct 02, 2023,05:41 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பெரும் சிதிலமடைந்துள்ளது. பாஜக சொன்னதையெல்லாம் தட்டாமல் கேட்டு வந்த அதிமுக சமீப காலமாக கடும் கொதிப்புடன் காணப்பட்டது. காரணம், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சும், செயல்பாடும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா ஆகியோர் குறித்து அண்ணாமலை குறித்து பேசிய கருத்துக்கள் அதிமுகவினரை கொதிப்படைய வைத்து விட்டது.


இந்த நிலையில் அதிரடியாக தனது நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டிய அதிமுக,  பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதை பாஜக தரப்பு எதிர்பார்க்கவில்லை. அதை விட முக்கியமாக, எடுத்த முடிவிலிருந்து அதிமுக பல்டி அடிக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அதிமுகவோ எடுத்த முடிவு உறுதியானது, இறுதியானது என்று கூறி மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது.




இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்தது. அவரும் கிளம்பிச் சென்றார். டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அதிமுக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கட்சித் தலைமைக்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை கொடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அண்ணாமலை அவரை சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதிமுகவுடன் ஒத்துப் போகுமாறும், இறங்கிப் போகுமாறும், அடக்கி வாசிக்குமாறும் அண்ணாமலை அறிவுறுத்தப்படுவாரா அல்லது தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்