சென்னை: தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டிலேயே பெரிய சட்டசபைத் தொகுதியாக சோழிங்கநல்லூரும், சிறிய தொகுதியாக கீழ் வேளூர் தொகுதியும் உள்ளன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகம். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை - 3,10,54,571. ஆண் வாக்காளர்கள் - 3,00,68,610. 3ம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 8016 பேர் ஆகும்.
வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு டிசம்பர் 9ம் தேதி வரை இருக்கும். அதற்குள் தங்களது பெயர்களை சேர்ப்பது, திருத்துவது, நீக்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் 17 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர்களை சேர்க்கலாம். முகவரி மாறியிருந்தால் அதையும் உரிய விண்ணப்பம் கொடுத்து சரி செய்து கொள்ளலாம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும், சட்டசபைத் தொகுதி வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்றும் விண்ணப்பங்களை அளிக்கலாம். பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வாக்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
பெரிய சட்டசபைத் தொகுதி - சிறிய தொகுதி

வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதுபடி பார்க்கும்போது தமிழ்நாட்டிலேயே பெரிய சட்டசபைத் தொகுதியாக சோழிங்கநல்லூர் திகழ்கிறது. சென்னையின் புறநகரான இது செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் வரும் பெரிய தொகுதியாகும். தொகுதி மறு வரையறையின் கீழ் உருவாக்கப்பட்ட தொகுதி இது. இத்தொகுதியில் மொத்தம் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதேபோல தமிழ்நாட்டிலேயே மிக மிக சிறிய தொகுதி என்ற பெயரை நாகப்பட்டனம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி பெறுகிறது. இந்த தொகுதியில் மொத்தமே 1,69,030 லட்சம் வாக்காளர்கள்தான் உள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டின் செல்லத் தொகுதியாக இது மாறியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}