சென்னை: தமிழ் வழியில் ஜப்பானிய மொழியை கற்றுத் தர தமிழ்நாடு அரசு அருமையான ஏற்பாட்டைச் செய்துள்ளது. இதைக் கற்றுக் கொள்வோருக்கு ஜப்பானில் ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த அரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு சார்ந்த பல்வேறு பயிற்சி வகுப்புகள், பயிற்சிகள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஜப்பானிய மொழி கற்பித்தலும் நடைபெறவுள்ளது.
ஜப்பானில் 18 லட்சம் திறன் வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்தியாவில் தரப்படுவதை விட 3 முதல் 6 மடங்கு அதிக சம்பளமும் இங்கு கிடைக்கும். என்ஜீனியரிங் பிரிவு வேலைவாய்ப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். என்ஜீனியரிங் அல்லாத பிரிவுகளில் ரூ. 12 முதல் 15லட்சம் வரை சம்பளமாக கிடை்கும்.
எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர், மெக்கானிக்கல், ஏஐ, ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டாலிட்டி, நர்சிங் என ஏகப்பட்ட பிரிவுகளில் வேலைகள் காத்திருக்கின்றன. இதற்கான பயிற்சியில் சேர விரும்புவோர் ஏதாவது ஒரு டிகிரி அல்லது ஐடிஐ முடித்திருத்தல் அவசியம். என் 5 பயிற்சிக்கு 3 மாத காலமும், என் 3 பயிற்சிக்கு 3 மாத காலமும் ஆகும். இதில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கான கடைசித் தேதி 2024ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஆகும். டிசம்பர் மாதத்திலிருந்து பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கும். வாரத்திற்கு 5 நாட்கள்தான், அதுவும் தினசரி 2 மணி நேரம்தான். இதில் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது. நேரடியாக கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முன்பதிவு செய்ய இந்த இணைப்பில் போய் அதைச் செய்து கொள்ளலாம்:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeQbhsdAOXydQLVtHkZjgVpnWnszG90L8FmrgaZ0KLxxg836Q/viewform
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}