பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சந்திப்பு.. என்ன விசேஷம்?

Jul 16, 2024,04:07 PM IST
டெல்லி: டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். 

மக்களவைத் தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. அதன்பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி பெறுப்பேற்றது. 3வது முறையாக பிரமதராக பதவி ஏற்றுக்கொண்டார் நரேந்திர மோடி. அவர் பதவியேற்ற பின்னர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள், முதல்வர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், 5 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று செல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர் ஆகியோர் உடன் சென்றனர். டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேற்று சந்தித்தார் ஆளுநர் ரவி. அதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.



இது தொடர்பாக தமிழக ஆளுநர் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவீட்டில்,  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பயணம் முடிந்து ஆளுநர் 19ம் தேதி சென்னை திரும்புகிறார். ஆளுநர் பிரதமரை சந்தித்தபோது, கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்தது தொடர்பாக விவாதித்தாரா என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்