சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் மூன்றாவது வாரம் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வை ஏப்ரல் 13க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதன் காரணமாக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 13க்குள் தேர்வு நடைபெறும் என அட்டவணை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏப்ரல் 10 மற்றும் 12 தேதிகளில் ரமலான் பண்டிகைக்கான பிறை தெரிய வாய்ப்புள்ளதால், 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 10ஆம் தேதி நடக்கவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22 ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}