கன மழையை சந்திக்க சென்னை ரெடி.. 150 ஊழியர்களுடன் 24 மணி நேர கன்ட்ரோல் ரூம்.. அவசர உதவிக்கு 1913

Oct 13, 2024,03:28 PM IST

சென்னை: சென்னையில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என்றும் இதில் ஒரு நாள் அல்லது, 2, 3 நாட்களுக்கு கன மழை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கன மழையை சமாளிக்க மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். அதேபோல மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அக்டோபர் 14ம் தேதி உருவாக  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னைக்கு அக்டோபர் 14, 15 ஆகிய நாட்களில் மிக கன மழை இருக்கும்  என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது 20 செமீ அளவுக்கு மழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.




இந்த அளவு மழை பெய்தால் சென்னை நகரில் பல பகுதிகளில் வெள்ளக்காடாகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.  இதுதொடர்பான ஏற்பாடுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையையொட்டியுள்ள பகுதிகளில் மிகக்கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, சென்னைப் பெருநகர மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில்  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம். 


அவசர உதவிக்கு 1913 




வடகிழக்குப்பருவமழையை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள  1913 கட்டுப்பாட்டு அறை - வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கான நடவடிக்கைகள் - தயார் நிலையில் உள்ள 13000 தன்னார்வலர்கள், அவர்களுக்கும் அரசுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கேட்டறிந்தோம். மேலும் கட்டுபாட்டு அறையில் இருந்து பொதுமக்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம்.


24 மணி நேரமும் இயங்கக் கூடிய இந்த கட்டுப்பாட்டு அறையில் தினசரி 4 shift அடிப்படையில் 150 பணியாளர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றனர். மேலும், தண்ணீர் தேங்கினால் அதனை வெளியேற்ற 100-க்கும் அதிகமான மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன.


மழைநீர் வடிகால் பாதைகளைச் சரிவர மூடி வைப்பது - மின்சார மாற்றிகளை சரியான முறையில் உயரத்தில் தூக்கி நிறுத்துவது போன்ற பணிகள், மழைக்கால தங்குமிடம்- உணவு உட்பட அனைத்து நிவாரண வசதிகளும் உடனுக்குடன் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் ஆலோசனைகளை வழங்கினோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


ஆயத்தமாகும் மக்கள்




மறுபக்கம் சென்னை மாநகர மக்களும் கூட கன மழையை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.


குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்போர் தங்களது முக்கிய பொருட்களை பத்திரப்படுத்தி வைத்து வருகின்றனர். குறிப்பாக சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் எடுத்து வைப்பது, வாகனங்களை மேடான பகுதிகளில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மக்கள் செய்து வருகின்றனர்.


மறுபக்கம் தேசிய பேரிடர் மீட்புப் படையும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. படகுகள் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளையும் கூட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.  சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கினால் அதை அகற்ற மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சென்னை மாநகரில் மழை நீர் வடிகால் வசதிகள் சரி செய்யப்பட்டுள்ளது என்பதாலும் மாநகராட்சி அதிகாரிகள் போதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதாலும் இந்த மழையை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்