தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி..  4% அகவிலைப்படி உயர்வை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

Mar 12, 2024,07:30 PM IST

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இது குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,




மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடி திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 


அவ்வகையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 46 சதவீதம் ஆக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். 


இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்