சென்னை: தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயத்தை மானிய விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
நாட்டில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தக்காளி பிற மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் கடுமையான மழையும் வெயிலும் மாறி மாறி நிலவு வருகிறது. இதனால் தக்காளியின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தக்காளி வரத் குறைந்து பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் தக்காளியின் அளவும் குறைந்தது. இதன் எதிரொலியாக வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பலப் பகுதிகளுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்தது.இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டிலும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் சோகத்தில் உறைந்தனர்.
இந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி நூறுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ ₹ 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பெரிய வெங்காயம் ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம் தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர், ஆகிய பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதுக்கல் மற்றும் வெளிச்சந்தையில் விற்பதை தடுக்க ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே தக்காளி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}