இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் மாபெரும் விழா.. முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'Maestro' ஸ்டிரோக்!

Mar 13, 2025,09:24 PM IST

சென்னை: இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசை பங்களிப்பைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாபெரும் விழா நடத்தவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு தந்த தவப் புதல்வனாக விளங்கும் இளையராஜா தேசிய அளவில் பல சாதனைகளைப் படைத்தவர், பல விருதுகளை அள்ளிக் குவித்தவர். அன்னக்கிளி தொடங்கி இன்று வரை அவரது பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் மூச்சுக் காற்றாய் நிரம்பிக் கிடக்கிறது. இளையராஜாவின் இசைத் தாலாட்டை அனுபவிக்காத தமிழ்நாட்டுக் குழந்தையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அன்றும் நேற்றும் இன்றும் என்றுமாய் இளையராஜா இசை மழையைப் பொழிந்தபடி இருக்கிறார்.


அவர் காலத்து இசையமைப்பாளர்கள் பலரும் ஓய்வுக்குப் போய் நெடுங்காலமாகி விட்ட நிலையிலும் கூட இளையராஜா மட்டும் இன்னும் அதே வேகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறார். 82 வயதிலும் லண்டனில் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கூட்டி ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா  என்று சமீபத்தில் அசரடித்தார்.




அவரது வேலியன்ட் என்ற சிம்பொனி இசைத் தொகுப்பு சமீபத்தில் லண்டனில் அரங்கேறியது, அனைவரையும் அது வியக்க வைத்தது.  இந்த நிலையில் தனது லண்டன் பயணத்திற்கு  தன்னை நேரில் வந்து சந்தித்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எக்ஸ் தளம் மூலம் நன்றி கூறியிருந்த இளையராஜா, இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருக்கு நன்றி தெரிவித்தார்.


ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்ற இளையராஜாவை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வரவேற்று மகிழ்ந்தனர். அப்போது முதல்வரிடம் நீண்ட நேரம் தனது லண்டன் அனுபவத்தை பகிர்ந்து மகிழ்ந்தார் முதல்வர். நம்ம பசங்க எல்லாம் விசலடிச்சு மகிழ்ந்தார்கள் என்று  ராஜா புன்னகையுடன் கூறியபோது அவரது முகத்தில் பெருமிதம் தெறித்தது.


இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா  அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.


அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என்று கூறியுள்ளார்.


தமிழ்நாடு முதல்வரின் இந்த அறிவிப்பு மேலும் ஒரு மாஸ்ட்ஸ்டிரோக்காக பார்க்கப்படுகிறது. இளையராஜாவுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த விழாவில் இசையுலகம், பல்துறைப் பிரமுகர்கள் என பிரமாண்டமாக நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் அனைத்து திரையுலக ஜாம்பவான்களும் பங்கேற்கும் வகையில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த விழாவை முதல்வர் திட்டமிட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

news

மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்

news

தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்

news

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு

news

'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

news

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

news

விஜய்யின் ஜனநாயகன் படம் அவரது அரசியலுக்கு உதவுமா? மக்கள் ஆதரவை பெருக்குமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்