"மாபெரும் 7 தமிழ்க் கனவு".. பட்ஜெட்டுக்கு "டீசர்" வெளியிட்ட தமிழ்நாடு அரசு.. வேற லெவல் எதிர்பார்ப்பு

Feb 18, 2024,09:53 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் நாளை என்ன இடம் பெறப் போகிறது என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பட்ஜெட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மேலும் எகிற வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.


தமிழ்நாடு சட்டசபையில் நாளை 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். அவர் தாக்கல் செயயவுள்ள முதல் பட்ஜெட் இது. இந்த நிலையில் பட்ஜெட்டில் என்னவெல்லாம் இடம்பெறக் கூடும் என்று யூகங்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன.


இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு 7 முக்கியத் தலைப்புகளில்தான் பட்ஜெட் உரை நாளை இடம் பெறும் என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட பட்ஜெட் தொடர்பான டீசர் போல இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், 


  • சமூக நீதி
  • கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு
  • உலகை வெல்லும் இளைய தமிழகம்
  • அறிவுசார் பொருளாதாரம்
  • சமத்துவ நோக்கில் மகளிர் நலம்
  • பசுமை வழிப் பயணம்
  • தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் 

ஆகிய அம்சங்களில் மாபெரும் 7 தமிழ்கனவுகள் இடம்பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்