Municipal Corporations.. இந்தியாவிலேயே டாப் 2 நம்ம தமிழ்நாடுதான்.. எதுல தெரியுமா?

Aug 13, 2024,06:30 PM IST

சென்னை:   இந்தியாவிலேயே நகர்ப்புறமயமாக்கலில் தமிழ்நாடு நம்பர் 2 மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவிலான மாநகரங்களை அதாவது மாநகராட்சிகளைக் கொண்ட 2வது பெரிய மாநிலம் தமிழ்நாடுதான். முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.


தமிழ்நாட்டில் நேற்று முதல் புதிதாக நான்கு மாநகராட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் புதுக்கோட்டையே அவை. இவற்றையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 25 மாநகராட்சிகள் உள்ளன. இந்தியாவிலேயே  அதிக அளவிலான மாநகராட்சிகளைக் கொண்டுள்ள மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 2வது இடத்தைப் பிடித்துள்ளது. 29 மாநகராட்சிகளுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.


இந்திய அளவில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு டாப்பில் உள்ளது.  கல்வி, சுகாதாரம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் தமிழ்நாடு நாட்டிலேயே சிறந்து விளங்குகிறது. குறிப்பாக கல்வியில், அதிலும் உயர்கல்வியில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. நாட்டின் முன்னணி  கல்வி நிறுவனங்கள் வரிசையிலும் தமிழ்நாடே முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல நகர்ப்புறமயமாக்கலிலும் தமிழ்நாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. அதைத்தான் தற்போது தமிழ்நாட்டில் பெருகி வரும் மாநகராட்சி எண்ணிக்கை வெளிப்படுத்தியுள்ளது.




இந்தியாவில் அதிக அளவிலான மாநகராட்சிகளைக் கொண்ட மாநிலங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். மகராராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளும், தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகளும் உள்ளன.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருப்பதிலேயே சீனியர் மாநகராட்சி சென்னைதான். 1668ம் ஆண்டு இது உருவாக்கப்பட்டது. இங்கு 200 வார்டுகள் உள்ளன. இதையடுத்து 2வதாக மாநகராட்சி அந்தஸ்தைப் பெற்ற மாநகரம் மதுரை. 1971ம் ஆண்டு முதல் இது இயங்கி வருகிறது. இங்கு 100 வார்டுகள் உள்ளன. கோவை மாநகராட்சி 1981ல் உருவாக்கப்பட்டது. இங்கும் 100 வார்டுகள் உள்ளன. இவை தவிர திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், கும்பகோணம், ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி, புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாநகராட்சிகள் உள்ளன.


சென்னை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 71 லட்சத்திற்கும் மேற்பட்ட்டோர் வசிக்கின்றனர். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மாநகராட்சிகள் - கோயம்பத்தூர் மற்றும் மதுரை. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகள் - திருச்சி, தாம்பரம்.


பிற மாநிலங்களில் உள்ள மாநகராட்சிகள் விவரம்:


ஆந்திரப் பிரதேசம் - 17

அருணாச்சல் பிரதேசம் - 1

அஸ்ஸாம் - 2

பீகார் - 19

சட்டிஸ்கர் - 14

கோவா - 1

குஜராத் - 8

ஹரியானா - 11

ஹிமாச்சல் பிரதேசம் - 5

ஜார்க்கண்ட் - 9

கர்நாடகா - 11

கேரளா - 6

மத்தியப் பிரதேசம் - 16

மகாராஷ்டிரா - 29

மணிப்பூர் - 1

மேகாலயா - 1

மிஸோரம் - 1

ஒடிஷா - 5

பஞ்சாப் - 13

ராஜஸ்தான் - 11

சிக்கிம் - 1

தெலங்கானா - 13

திரிபுரா - 1

உத்தரப் பிதேசம் - 17

உத்தரகாண்ட் - 9

மேற்கு வங்காளம் - 7

அந்தமான் நிக்கோபார் தீவுகள் - 1

சண்டிகர் - 1

டெல்லி - 1

ஜம்மு காஷ்மீர் - 2


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்



சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்