சென்னை: தமிழ்நாட்டில் 19ம் தேதி வரைக்கும் வெயில் நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்துகிறது. அட்டே மறுபடியும் சம்மர் வந்துருச்சா என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக்கிற அளவுக்கு வெயில் வெளுக்கிறது. பல ஊர்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் புழுக்கத்தில் உள்ளனர்.
குறிப்பாக மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தொடர்ந்து 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுக்கிறது. சென்னையிலும் கூட பகல் முழுக்க நல்ல வெயில் கொளுத்துகிறது. இதே நிலைதான் பல்வேறு பகுதிகளிலும் நிலவுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு குட்நியூஸ் சொல்லியுள்ளார். அதாவது இன்னும் சில நாட்கள் இந்த வெயில் தொடருமாம். அதேசமயம், வருகிற 19, 20ம் தேதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக அவர் ஹேப்பி நியூஸ் சொல்லியுள்ளார். இதுதவிர வேறு அப்டேட் எதுவும் அவர் தரவில்லை. அதேசமயம், 19, 20ம் தேதிக்குப் பிறகு வெயில் வெகுவாக குறைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இதுதொடர்பான பல்வேறு கால்வாய், வாய்க்கால் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இதுதொடர்பான ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}