பிச்சைக் காசா.. நடிகை குஷ்பு அவர்களே.. அடக்கி வாசியுங்கள்.. அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்

Mar 13, 2024,11:08 AM IST

சென்னை:   தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களை இழிவுபடுத்தியதாக  நடிகை குஷ்புவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி  எழுப்பியிருந்தார். அவர் கூறிய இந்த கருத்திற்கு கண்டங்கள் எழுந்துள்ளது. 


இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




நடிகை குஷ்பு அவர்கள் முதல்வர் வழங்கும் கலைஞர் உரிமைத் திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசியுள்ளார். தமிழக அரசு வழங்கும் திட்டத்தை பிச்சை போடுகிறார்கள் என்று கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை பற்றி அறியாதவர் அவர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. 


குஷ்பூவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா? அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பிடித்து பேசுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். 


நீங்கள் கோடியில் புரள்பவர். பண வசதி படைத்தவர், பெரிய நடிகை, உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது. இதனை சிலர் முதலமைச்சர் எனக்கு தரும் சீர் என சொல்கிறார்கள். சில தாய்மார்கள் என் பிள்ளைகள் என்னை பார்த்துக் கொள்ளாவிட்டாலும் மகாராசா முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்துக் கொள்கிறார் என சொல்கிறார்கள். 


அந்த அளவிற்கு வாழ்வாதரத்திற்கு உதவக்கூடிய உரிமைத் தொகையை  நீங்கள் அசால்டாக பிச்சை போடுகிறார் என்று சொல்கிறீர்கள். பிச்சை என்பதற்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு. உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி எல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக, இதற்கு உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்