டெல்லி: தென் மாநிலங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மாநிலம் என பிரித்து தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம்.
லோக்சபா தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.மொத்தம் வரும் 7 கட்டங்களில் தென் மாநிலங்களைப் பொறுத்தவரை 4 கட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு 2வது கட்டத்தின்போது தேர்தல் நடைபெறும். அதே கட்டத்தில் கர்நாடகத்தின் 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

கர்நாடகத்தின் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்டமான மே 7ம் தேதி தேர்தல் நடைபெறும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தின்போது வாக்குப் பதிவு நடைபெறும். தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் முதல் கட்டத்திலேயே முடிந்து விட்டாலும் கூட முடிவை அறிய ஜூன் 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட மொத்த இந்தியாவும் ஓட்டுப் போட்டு முடிக்கும் வரை தென் மாநில மக்கள் அமைதி காத்திருக்க வேண்டியுள்ளது.
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
{{comments.comment}}