சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மழைச்சூழல் இன்னும் பத்து நாட்களுக்கு நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் நிலவி வந்த அனல் கக்கும் வெயில் தற்போது தணிந்து அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. சில ஊர்களில் கன மழையும் வெளுத்து வாங்கியுள்ளது. இந்த கோடை மழையால் மக்கள் குளிர்ந்து போயுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் வெயில் சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் பத்து நாட்களுக்கு தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளா.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமையான இன்று சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, மதுரை, தூத்துக்குடி உட்புறப் பகுதிகள், சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வெதர்மேன் தெரிவிக்கிறார்.
சில இடங்களில் கனமழையாக இது இருக்ககூடும் என்றும் அவர் கணித்துள்ளார். சென்னையை பொருத்தவரை ஒன்பதாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தேதி வரை ஆங்காங்கே திடீர் என்று நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் கூறியுள்ளார். இந்த மழை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. சென்னையிலும் கூட நேற்று ஆங்காங்கே லேசான மற்றும் மிதமான மழை பெய்துள்ளது.
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}