வருது வருது.. காத்திருந்த காற்று மெல்ல வருது.. சின்னதாக மழை இருக்கும்!

Oct 13, 2023,10:00 AM IST

சென்னை: வட கிழக்குப் பருவ மழை எப்போது தொடங்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு காத்துள்ள நிலையில் அதுகுறித்த அறிகுறிகள் வெளி வர ஆரம்பித்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.


இதை வட கிழக்குப் பருவ மழைக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் கூட ஆவலுடன் காத்திருந்த காற்று வீச்சு தொடங்குவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவிததுள்ளார்.




இதுதொடர்பாக வெதர்மேன் போட்டுள்ள டிவீட்டில், சென்னை நகரை நோக்கி கடலிலிருந்து மேகக் கூட்டங்கள் நகர ஆரம்பித்துள்ளன. இதுதான் முதல் மேகக் கூட்டம். இதற்குத்தான் நாம் காத்திருந்தோம். இதை பருவ மழைக்காலத்தின் தொடக்கம் என்று கூற முடியாது. ஆனால் மாற்றம் நடக்க ஆரம்பித்து விட்டது. காற்றின் போக்கில் மாற்றம் தெரிகிறது. 10 மணிவாக்கில் சென்னை நகரில் சின்னதாக ஒரு மழை இருக்கும் என்று கூறியுள்ளார்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழைக்காலம்தான் மாநிலம் முழுமைக்கும் நல்ல மழைப் பொழிவு கிடைக்கும். குறிப்பாக சென்னைக்கு. இந்த முறை தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவ மழையே கூடுதலாக பொழிந்திருக்கிறது. குறிப்பாக சென்னைக்கு 8 சதவீதத்திற்கும் கூடுதலான மழை கிடைத்துள்ளது. ஏற்கனவே பெரும்பாலான நீர் நிலைகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில் வட கிழக்குப் பருவ மழைக்காலத்திலும் இயல்பான அளவில் மழை பெய்தாலே போதும் மக்களுக்கு தண்ணீர்ப் பஞ்சம் வராமல் தப்பி விடுவார்கள்.


மழை வருதோ இல்லையோ மாற்றம் வர ஆரம்பித்து விட்டது. அது ஏமாற்றம் தராமல் நல்ல மழைப் பொழியைும் கொடுத்து மனங்களையும், மண்ணையும் நிறைத்துச் சென்றால் மகிழ்ச்சிதான்.

சமீபத்திய செய்திகள்

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்