சென்னை: அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான அளவில் அல்லது அதற்கும் கீழே வெப்ப நிலை இருக்கும் என்று தமிழ்நாடுவெதர்மேன் கூறியுள்ளார். கிழக்கிலிருந்து வீசும் காற்றின் காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெயில் வெளுத்தெடுக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில். சென்னையிலும் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல்தான் வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சற்றே ஆறுதலான செய்தியைக் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
அதன்படி அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான அல்லது அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும். கிழக்கிலிருந்து வரும் காற்றே இதற்குக் காரணம். தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் உட்புற தமிழ்நாட்டிலும் கூட வெப்ப நிலை சற்று குறையும். இங்கெல்லாம் தொடர்ந்து 40 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியல் வரை பதிவாகி வருகிறது. இது 37 டூ 39 டிகிரி செல்சியஸாக குறையக்க ூடும்.
தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை அனல் அலை வீச்சுக்கு வாய்ப்பு குறைவுதான் என்று கூறியுள்ளார் வெதர்மேன். இன்று காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. காலையிலேயே கொளுத்தும் வெயிலை சற்று காணோம். இதுவே நல்ல அறிகுறிதான்.. ஒரு பக்கம் தேர்தல் வெப்பம்.. இன்னொரு பக்கம் சூரியனின் சுட்டெரிக்கும் வெயில் என மக்கள் வறுபட்டு வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு சற்று நிம்மதி கிடைத்தால் சந்தோஷம்தானே.. அனுபவிப்போம் இதையும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}