சென்னை: தமிழநாடு முழுவதும் நல்ல மழை பெய்து வருவது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்தில் சில இடங்களில் ரெட் அலர்ட் கொடுக்கும் அளவுக்கு மிக மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தென் மேற்குப் பருவ மழை மே 31ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை களை கட்டியுள்ளது. இதுவரை ஆங்காங்கே நனைத்துச் சென்ற கோடை மழையானது தற்போது தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பெரும்பாலான பகுதிகளில் சூப்பராக பெய்ய ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளிலும், உள் மாவட்டங்களிலும் செமத்தியான மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மே மாதத்தில் UAC அதாவது மேலடுக்கு வளிமண்டல சுழற்சி உருவாவது அரிதானது. அது தற்போது உருவாகியுள்ளதால்தான் இந்த மழை நமக்குக் கிடைத்துள்ளது. இது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும் இன்னும் நிறைய மழை இருக்கிறது என்றும் கொட்டும் மழையில் தேனைக் கலந்து காதில் ஊற்றியுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
ஒரு வாரத்தில் சில இடங்களில் ரெட் அலர்ட் கொடுக்கும் அளவுக்கு மிக மிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வெதர்மேன் எச்சரித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று சூப்பரான மழை பெய்யும் என்றும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
சென்னையில் அலுவலகம் செல்வோர் காலையிலேயே மழை பெய்து வருவதால் குடையுடனும், ரெயின் கோட்டுடனும் செல்வதைக் காண முடிந்தது. மழை பெய்து வருவதால் டூவீலரில் செல்லும் பலர் அதற்கு விடை கொடுத்து விட்டு பஸ் ஆட்டோ, ரயில், மெட்ரோ என மாறியிருப்பதால் அவற்றில் கூட்டமும் காணப்படுகிறது.
பிறகென்னப்பா.. சூடான வடையும்.. சூப்பரான கவிதை நடையுமாக.. மழையை அனுபவிக்க தயாராகுங்க!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}