மக்களே அலர்ட்டாக இருங்க... இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்

Oct 02, 2024,03:23 PM IST

சென்னை:  கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நான்கு வட மாவட்டங்களை வெள்ளம் வெளுத்தெடுத்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் இந்த  வருடம் வட கிழக்குப் பருவமழைக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு 112 சதவீத அளவுக்கு கூடுதல் மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக நேற்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று மட்டும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 



மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் கோயமுத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வான் சாகச நிகழ்ச்சி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மெரீனா பீச் விமான சாகசம்.. சென்னை மெட்ரோவுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

news

Nobel prizes 2024.. மருத்துவத்திற்கான நோபல் பரிசு .. 2 ஸ்வீடன் ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு

news

திமுக அரசு முறையாக திட்டமிடவில்லை.. இது அரசின் தவறுதான்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

Kerala tour diaries.. அழகான மலம்புழா அணை .. பிரமிக்க வைக்கும் பாலக்காடு கோட்டை!

news

பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. கேம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே.. பக்கென்று கொளுத்தி போட்ட பிக்பாஸ்!

news

விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்.. இனிமேல் கவனமா இருங்க.. தவெக தலைவர் விஜய் அட்வைஸ்!

news

ஏர்ஷோவில் பங்கேற்றோர் போட்டுச் சென்ற குப்பை.. கிட்டத்தட்ட 19 டன்.. அகற்றிய சென்னை மாநகராட்சி!

news

மதுரையில் 20 ஆயிரம் பேரைத் திரட்டி.. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற.. எம்.பி. சு. வெங்கடேசன்

அதிகம் பார்க்கும் செய்திகள்