மண்ட பத்திரம் மக்களே.. 4 நாட்களுக்கு வறண்ட வானிலைதானாம்..  2,3 ல் லேசான மழைக்கு வாய்ப்பு!

Mar 29, 2024,06:56 PM IST

சென்னை: இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம். ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் தேதி தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. கடந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்ததோ.. எவ்வளவு தண்ணீரால் அவதிப்பட்டோமோ.. அதே அளவிற்கு இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகிறோம். மதியம் 12 மணி முதல் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 



அய்யோ இந்த வெயில் காலம் எப்ப தான் முடியுமோ என்ற மக்களின் மைன்ட் வாய்ஸ்.. நமக்குப் புரிகிறது.. ஏனெனில் இன்னும் இரண்டு மாதத்திற்கு இந்த வெயிலின் தாக்கத்தினால் ஓடவும்  முடியாது.. ஒளியவும் முடியாது .. இந்த வெயில் தாக்கம் ஓயாது..


ஏனெனில் தமிழ்நாட்டில்  வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம். குறிப்பாக இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக கூடுமாம்.  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  வறண்ட வானிலையே நிலவுமாம். அப்போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயருமாம். பி கேர்ஃபுல் மக்களே!


இதற்கிடையே தென் தமிழக மக்கள் சற்று பெருமூச்சு விடலாம். ஏனென்றால் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடுமாம். அதே நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்