Vaathi Coming.. ஜூன் 18ல் தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்.. முதல் பொதுக்கூட்டம் எப்போ?

Jun 08, 2024,05:35 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் ஜூன் 18ம் தேதி சென்னை பனையூரில் நடைபெற உள்ளது.


நடிகர் விஜய் 2009ம் ஆண்டு நற்பணி மற்றும் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.  தனது இலக்கு 2026தான் என்று அவர் தெளிவாக கூறி விட்டார். தற்போது கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் அவரது கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.




 2021 ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தின் முதல் பயணத்தைத் தொடங்கினார் விஜய். அதன் பிறகு அவரது இயக்கம் சார்பில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். போட்டியிட்ட 169 வேட்பாளர்களில் 129 பேர் வெற்றி பெற்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஷாக் கொடுத்தனர். 2022 ல் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய்யின் பிரச்சாரம் இல்லாமலேயே 10க்கும் மேற்பட்ட இடங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் கைப்பற்றினர். 


2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருந்த வேலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்று விஜய் தெரிவித்து விட்டார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டம்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த கூட்டத்தில் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம், புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்வது குறித்தும் பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்