தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ரெடி.. நடுவுல மலர் இருக்காம்.. ஆகஸ்ட்.. 22ல் அறிமுகம் செய்கிறார் விஜய்

Aug 17, 2024,07:57 PM IST

சென்னை:   தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ரெடியாகி விட்டது. எந்தக் கொடி என்பதையும் கட்சித் தலைவர் விஜய் தேர்வு செய்து விட்டாராம். ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து கொடியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களையும், தவெக ஆதரவாளர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.


நடிகர் விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சிக்குப் பெயர் சூட்டியுள்ளார். இப்போது கோட் படத்தை முடித்துள்ள விஜய், அடுத்து ஒரு படம் செய்துள்ளார். அதுதான் நடிகராக அவர் நடிக்கப் போகும் கடைசிப் படம். அந்தப் படத்தை முடித்து விட்டு தீவிர அரசியலில் குதிக்கவுள்ளார் விஜய்.


இதற்கிடையில் கட்சிக்குத் தேவையான பல்வேறு பூர்வாங்க பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. உறுப்பினர் சேர்க்கை, கட்சியில் அணிகள் உருவாக்குதல், நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மறுபக்கம் மாநில மாநாட்டை நடத்துவது தொடர்பான வேலைகளும் வேகமாக நடந்து வருகின்றன. செப்டம்பர் மாதம் திருச்சி அல்லது விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெறும் என்று பேச்சு அடிபடுகிறது.




இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கட்சியின் கொடி ரெடியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு கொடிகள் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து ஒரு கொடியை விஜய் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்சி பெயர் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் லெட்டர் பேடில் இருந்த நிறத்தில்தான் கட்சிக் கொடி இருக்கிறதாம். அதில் கூடுதலாக பசுமை இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. விவசாயத்தை குறிக்கும் வகையில் பசுமை நிறமும் கொடியில் இருப்பதாக சொல்கிறார்கள்.


இன்னொரு முக்கிய விஷயம் கொடியில் ஒரு மலர் இடம் பெற்றுள்ளதாம். அந்த மலரின் பெயர் வாகை மலர். இது தமிழர்களின் பாரம்பரியத்தில் முக்கியமான பூ ஆகும். ஆதி காலத்தில் மன்னர்கள், படைத் தளபதிகள், வீரர்கள் போரில் வெற்றி பெற்று ஊர் திரும்பியதும் இந்த மலரைச் சூடித்தான் வெற்றியைக் கொண்டாடுவார்கள். இதனால்தான் இந்த மலருக்கு வாகை என்றே பெயர் வந்தது. வாகை என்றால் வெற்றி என்று பொருளாகும். 


விஜய் கட்சியின் பெயர் மட்டுமல்லாமல், அவரது பெயரிலும் வெற்றி இருப்பதால், வெற்றி என்று பொருள் படும் வாகை மலரையும் கொடியில் விஜய் இடம் பெற வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எங்கெங்கும் வெற்றி என்ற பொருள் படும் வகையிலும் இந்த மலரை விஜய் டிக் அடித்ததாகவும் கூறப்படுகிறது.


ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து கொடியை அறிமுகம் செய்யவுள்ளாராம் விஜய். அதன் பின்னர் மாநாடு குறித்த விவரங்கள் வெளியாகும். செப்டம்பரில் மாநாடு நடைபெறும். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அல்லது தந்தை பெரியார் பிறந்த நாளான 17 ஆகிய தேதிகளில் ஒன்றில் மாநாடு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்