சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகிகளின் ஆலேசனை கூட்டம் தொடங்கியது.
நடிகராக இருந்த விஜய் கடந்த 2ம் தேதி தமிழ வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். அரசியல் பிரவேசம் என்றால் சும்மாவா?. விஜய் அடுத்த அடுத்த கட்சி வேலைகளை தொடங்கி வேகம் காட்டி வருகிறார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் தான் இலக்கு. அதற்குள் நான் நடித்து முடித்து விட்டு வந்து விடுகிறேன். கட்சியினரும் அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள் என்று விஜய் அறிவித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று இருந்தது. தற்போது அதில் இருந்த ஒற்றுப்பிழை சரி செய்யயப்பட்டு தமிழக வெற்றிக் கழகம் என மாறியுள்ளது.நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயரில் இருந்த எழுத்துப் பிழை நீக்கப்பட்டு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டுள்ளது. தனது தவறை திருத்திக் கொண்ட விஜய்யின் இந்த செயல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிழை திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் முதல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார்.
அதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நாளை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
இதன் படி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனைவ௫ம் காலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.இதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
{{comments.comment}}