சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை இரு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை நேற்று வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.
அதன் பிறகு இந்த சட்டம் அமலாக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இதை அமல்படுத்துவது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது மீண்டும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை தேர்தல் சந்தர்ப்பவாதம், தேர்தல் ஆதாயத்திற்காக நாட்டை பிளவுபடுத்தப் பார்க்கிறது பாஜக என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். அதிமுகவும் கூட இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
விஜய்யின் மிக மிக மென்மையான இந்த அறிக்கையை அவரது கட்சியினர் வரவேற்றுள்ளனர். மிக மிக நாகரீகமாக விஜய் தனது கருத்தை எடுத்து வைத்துள்ளார். இதுதான் எங்களது பாணி என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மற்றவர்கள், விஜய்யை விமர்சித்துள்ளனர்.
சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவை கண்டிக்கவில்லை, அதை ஆதரித்த அதிமுகவையும் கண்டிக்கவில்லை. ஆனால் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று திமுக அரசு மட்டும் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.. ரொம்ப பாதுகாப்பாக அரசியல் பண்றீங்க புரோ என்று திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
{{comments.comment}}