சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் முன்பு இருந்த ஒற்றுப்பிழை சரி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலே நமது இலக்கு. அதற்குள் நான் நடித்து முடித்து விட்டு வந்து விடுகிறேன். கட்சியினரும் அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள் என்று விஜய் அறிவித்துள்ளார்.
முன்னதாக அவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று இருந்தது. தற்போது அதில் இருந்த ஒற்றுப்பிழை சரி செய்யயப்பட்டு தமிழக வெற்றிக் கழகம் என மாறியுள்ளது. பிழை திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் முதல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நாளை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயரில் இருந்த எழுத்துப் பிழை நீக்கப்பட்டு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிலிருந்தே இதுதொடர்பாக அவர்கள் டிவீட் செய்து வந்தனர். இப்போது வரை அதுவே டிரண்டிங்கிலும் இருந்து வருகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}