"2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்".. கட்சியினருக்கு விஜய் வைத்த இலக்கு.. மாஸ் முடிவு!

Feb 19, 2024,05:24 PM IST

சென்னை:  தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அதன் தலைவர் விஜய் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அவர் மூலம் பல்வேறு அறிவுறுத்தல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டம் குறித்தும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுத்துள்ள விரிவான அறிக்கை:




தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்களின் ஆலோசனையின் படி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்:


நம் தலைவர் அவர்களின் ஆணைப்படி தமிழக வெற்றி கழகத்தின் உள் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். நமது தமிழக வெற்றிக்கழக தலைவர் அவர்களால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.


தமிழக வெற்றி கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாமில் முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து உறுப்பினர் சேர்க்கை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்ட பணியாகும்.


ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக சேர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ரீதியாகவும் சட்டமன்ற தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலில் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும். மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.




பூத் வாரியாக வாக்காளர்களை கட்சி சார்புள்ளவர்கள் யார் யார், எந்த கட்சியையும் சாராதவர்கள் யார் யார், என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். நமது கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பெயரில் மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் கட்டுப்பாடுகளை ஏற்று செயல்படுவதை கடமையாக கருத வேண்டும்.


தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரை அறிவித்து தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை மூலம் நமது இலக்கு குறித்தும் அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் போஸ்டர்கள் பிளக்ஸ் பேனர்கள் தயாரிக்கும் போதும் பயன்படுத்தும் போதும் கட்சித் தலைமையால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


நமது கழகம் தொடர்பான அதிகாரபூர்வ நியமனங்கள் அறிவிப்புகள் அனைத்தும் கழகத் தலைவர் அவர்கள் அல்லது தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் பொதுச்செயலாளர் அவர்களால் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கங்களில் வெளியிடப்படும் என்பதை மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு நமது இலக்கான 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்